நாகரீகம்

உனக்கு முன் வாழ்ந்தவனை
விட நீ
மேம்பட்டிருந்தால்
அது நாகரீகம்

சமைக்காமல் பச்சையாய்
தின்றவனை விட
சமைத்து தின்பவன்
நாகரீகமானவன்

கொன்று தின்றவனை விட
தின்பதற்கு கொல்லாதவன்
நாகரீகமானவன்
அதைவிட
பேசியே கொல்லாதவன்
இன்னும் நாகரீகமானவன்

வெறும் கல்லை
கும்பிட்டவனை விட
கல்லில் கோயில்கட்டி
கும்பிட்டவன் நாகரீகமானவன்

பொதுநலத்தில் தன்னலம்
காண்பவன்
தன்னலக்காரனை விட
நாகரீகமானவன்

இறைவனின் சிரிப்புக்காக
ஏங்கி நிற்பவனை விட
ஏழைகள் சிரிப்பில்
இறைவனைக் காண்பவன்
நாகரீகமானவன்

நீங்களும் நானும்
ஏசிக்கொண்டால் சண்டை சண்டைக்கு பின்னும் நீங்களும் நானும்
பேசிக் கொண்டால் நாகரீகம்

படிவளர்ச்சிக்கு உட்பட்டது
நாகரீகம்
படிப்பு இருந்தும்
வளராமல் இருப்பது துரதிர்ஷ்டம்.

நாகரீகத்தின் படிக்கட்டுகள்
நேற்றைவிட இன்று உயரம்
இன்றைவிட நாளை உயரம்

-குமரன் வேலு

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started