தமிழ்ப் பள்ளிகள் தரும் பொருளாதாரம்

கடந்த பதிவு ஒன்றில், தமிழ்க்கல்வியின் விடுபடாத தொடர்ச்சியின் இன்றியமையாமைப் பற்றி பேசியிருந்தேன்.

தமிழ்ப்பள்ளிகளின் வழி தமிழறிவும் தமிழுணர்வும் பெற்ற குமுகாயத்தை உருவாக்குவது மட்டுமல்ல நமது நோக்கம். நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப்பள்ளிகள் பலருக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன.

தமிழ்க்கல்வி நேரடியாக:

9000 – ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றது
(100- கல்லூரி விரிவுரையாளர்கள்
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வேலை வாய்ப்பு)

528 – துறைத்தலைவர்கள் ( தலைமையாசிரியர்கள்)

  • அரசாங்கப் பதவியில், கொள்கை முடிவுகள் எடுத்து அதிகாரத்துடன் அதை நடைமுறைப் படுத்தும் இடத்தில் நம்மினத்தவர்கள் மிக மிகக் குறைவு. தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் ஓவ்வொருவரும் பள்ளிசார்ந்த கொள்கை முடிவுகளை எடுக்கின்றார்கள். வேறிடத்தில் கிடைக்குமா இந்த வாய்ப்பு?

(தமிழ்ப்படித்து தமிழால் முன்னேறிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசியல்வாதிகள் நன்றி கெட்டத்தனமாக தம் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் விட்ட கதை வேறு கதை)

81,000 – மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும்
சிற்றுண்டிச் சாலைகள் (காண்டீன்)
( நம்மினத்தவரே உரிமையாளர்கள்)

81,000 – மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள்
81,000- காலணிகள்
81,000- நோட்டு பொத்தகங்கள், எழுதுகோல்கள், இன்னும் இதர பொருட்கள்

பள்ளிச்சீருடைகளை, காலணிகளை யாரோ ஒரு முதலாளி தயாரிக்க பணம் அவர்களின் பைக்குள் சென்று சேர்கிறது.

இதையே நம்மவர்கள் ஒரு நிறுவனம் தொடங்கி பள்ளிக் குழந்தைகளுக்குச் சீருடை, காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடத்தை உருவாக்கி இருந்தால் தமிழ்ப்பள்ளிகள் தரும் பொருளாதாரம் நமக்குளே இருந்திருக்கும்.

நாடறிந்த கல்வியாசான், மேனாள் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் பெரியவர் மன்னர் மன்னன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கருத்தைச் சொன்னார்.

தனித்து வாழும் தாய்மார்களுக்கு சீருடைகள் தயாரிக்கும் வேலையை வழங்கினால் அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும் என்றார்.
நல்ல ஏடல்.

தரமான கல்வியை வழங்கி, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதன் வழி, தமிழ்ப்பள்ளிகள் போட்டியில்லாத வேலை வாய்ப்பையும், பொருளாதார மேன்மையையும் நம்மின குமுகாயத்திற்கு வழங்க முடியும்.

ஆரம்பக்கல்வியைத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி, பல்வேறு துறைகளில் படிப்பை முடித்து பட்டம் பெற்று ஆசிரியராக வேலைசெய்பவர்கள் முவர் நால்வர் கூட்டாக பயிற்சிப் புத்தகங்களை ஆங்கிலம், மலாய் ,தமிழ் என பல மொழிகளில் எழுதும் வல்லமையைப் பெற வேண்டும். இது வணிகம். அப்புத்தகங்கள் மலாய்ப்பள்ளி, சீனப்பள்ளி மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். வருகின்ற இலாபத்தில் ஒரு தொகையைத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்க வேண்டும்.

Peringkat Jumlah
Prasekolah 205,199
Rendah 2,727,068
Menengah 2,007,692
Jumlah 4,939,959
(Data APDM 31 Januari 2019)

ஆரம்பப் பள்ளியில் மட்டும் 27 இலட்சம்
மாணவர்கள் பயில்கின்றார்கள்.
எவ்வளவு பெரிய சந்தை என்று பாருங்கள்.

பயிற்சி புத்தகங்களை தமிழ்ப்பள்ளியில் படித்த நம்மினத்தவர்கள் எழுதினால் என்ன.

சிந்தனையை விதையுங்கள்.

அன்புடன்

  • குமரன் வேலு
    14/7/2020.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started